×

தேனியில் சாலைமறியல் அரசு ஊழியர்கள் 98 பேர் கைது போலீசுடன் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு

தேனி, பிப்.3: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஐ.டி.ஐ  முன்பாக   அரசு ஊழியர் சங்கம்  சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை   வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ கன்வீனர் ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், கருவூலத்தில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். என்ற புதிய சாப்ட்வேரை நிறுத்த வேண்டும். ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்படுகின்ற பணி நியமனங்களை கைவிட வேண்டும். காலி பணியிடங்களை அரசு விதிகளுக்கு உட்பட்டு விரைவில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  தொடர்ந்து தேனி அரசு ஐடிஐ முன்பு உள்ள மதுரை -  தேனி தேசிய நெடுஞ்சாலையில்  சாலை மறியலில் ஈடுபட முயன்ற 80 பெண்கள் உட்பட 98 பேரை  தேனி போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags : Theni ,servants ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...