மதுரையில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி உடல்களை வாங்க மறுத்து மறியல்

மதுரை, பிப். 3:  மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே மேலவடம்போக்கி தெருவில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான, பழமையான இரண்டடுக்கு கட்டிடம் புதுப்பிக்கும் பணியின்போது நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் ஊழியர்கள் ராமர், சந்திரன், ஜெயராமன் கட்டிட இடிபாடுகளில் சிக்கி  பலியாகினர். இறந்தவர்களின் உடல்கள் மதுரை ஜிஹெச்சில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் திடீரென இறந்தவர்களின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பொறியாளரை கைது செய்யவும்,  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு பணி வழங்க கோரியும் மதுரை ஜிஹெச் முன்பு பனகல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பலியானவர்களில் ஜெயராமன் உடலை மட்டும் உறவினர்கள் பெற்று சென்றனர், ராமர், சந்திரன் உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு கிளம்பி சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>