×

மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு

திண்டுக்கல், பிப்.3: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக சில நாட்களுக்கு முன்பு வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிட்டனர். மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் விரைவாக வாக்களிக்கவும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகள் கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல்களில் போது ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்காக இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 103 வாக்குச் சாவடிகள் உள்ளன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்தால் 600 வாக்குச்சாவடிகள் கூடுதலாக வரும் அதற்கு கூடுதல் பணியாளர்களும் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

Tags : district ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...