புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து ஓய்வூதியர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

திண்டுக்கல், பிப்.3: தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் தர்ணா நடந்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர்கள் இன்னாசி, லட்சுமணன் முன்னிலை வகித்தனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். கருவூல பணிகளை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும், 21 மாத நிலுவை தொகையை அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர். மாவட்ட செயலாளர் ஆதிமூலம் நன்றி கூறினார்.

Related Stories:

>