×

வேடபட்டியில் குளத்தில் கொட்டப்படும் கோழிகழிவு சுகாதாரக்கேடு அபாயம்

திண்டுக்கல், பிப்.3: திண்டுக்கல் வேடபட்டியில் உள்ள ஆசாரிகுளத்தில் கோழிகழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல்லில் கோழி மற்றும் இறைச்சி கடைகள் ஏராளமாக உள்ளன. இறைச்சிக் கடைகள் மற்றும் கோழி கடைகளின் கழிவுகள் நகரின் மத்தியில் உள்ள வேடபட்டி ஆசாரி குளத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் குளம் மாசுபட்டு வருகிறது. ஆசாரி குளத்திற்கு செல்லும் பாதையில் இரு புறங்களிலும் கோழி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. துர்நாற்றத்தால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதுகுறித்து மகளிர் சுய உதவி குழு தலைவி நித்யா கூறுகையில், சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் இறைச்சிக் கடைக்காரர்கள் கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி வேடபட்டியில் உள்ள ஆசாரி குளத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் இரு புறங்களிலும் கொட்டுகின்றனர். இதனால் குளம் மாசுபடுகிறது. சுகாதாரக்கேடும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


Tags : pond ,Vedapatti ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்