10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

திருப்பூர், பிப். 3: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதிய சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.இந்த தர்ணா போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மணிவேலு வரவேற்றார். பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவி தலைவர் செளந்திரபாண்டியன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசந்திரமூர்த்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது, போக்குவரத்து கழக ஒய்வூதியர் சங்க மாநில துணைப் பொதுசெயலாளர் செல்வராஜ், அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் கருப்புச்சாமி, தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர் சங்க செயலாளர் அச்சுதன், ஆகியோர் தர்ணா போராட்டத்தை வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார்.

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும்.  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த தர்ணா போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>