திருப்பூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றவேண்டும்

திருப்பூர், பிப். 3: ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தலைமையில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், வளர்ச்சிப்பணிகள், குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.   மேலும் மாநகராட்சியில் அவ்வப்போது மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேங்காத வண்ணம் இரவு நேரங்களில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் குழாய் அடைப்புகளை உடனடியாக சரி செய்து போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இன்றி பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைக்க வேண்டும். தெருவிளக்குகள் 100 சதவீதம் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, மாநகர் நல அதிகாரி, உதவி ஆணையர்கள், புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தினர், இரண்டாவது குடிநீர் திட்ட செயற்பொறியாளர், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டன

Related Stories:

>