×

தி.மு.க சார்பில் அண்ணா நினைவு நாள்

ஈரோடு, பிப். 3:   ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று அண்ணா நினைவு நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி இன்று (3ம் தேதி) காலை 9 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு வீரப்பன்சத்திரம், கொடுமுடி வடக்கு, மேற்கு ஒன்றியம், மொடக்குறிச்சி கிழக்கு, மேற்கு, தெற்கு, சென்னிமலை, ஈரோடு, பெருந்துறை தெற்கு, கிழக்கு, வடக்கு, ஊத்துக்குளி தெற்கு, வடக்கு, மத்திய ஒன்றியம் உள்பட 14 இடங்களில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. எனவே கட்சி, அணி, கிளை, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Anna Memorial Day ,DMK ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்