×

நீர் திறப்பு நிறுத்தம் எதிரொலி சேறும், சகதியுமாக மாறிய பாசன கால்வாய்

இடைப்பாடி, பிப்.2:  மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் கிழக்கு -மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீரானது வாய்க்கால் பாலம், பூலாம்பட்டி, பிள்ளுக்குறிச்சி, எல்லமடை, மூலப்பாதை, குள்ளம்பட்டி, கத்தேரி வழியாக செல்கிறது. இந்நிலையில், கால்வாய் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கால்வாய் வறண்டு போய் காணப்படுகிறது. பில்லுக்குறிச்சி  கால்வாயில் தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. கால்வாயில் தண்ணீர் செல்லும்போது திரளான மக்கள் அப்பகுதியில் நீராடுவர். அப்போது, அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் கால்வாயில் தவறி விழுந்து விடுவது வழக்கம். தற்போது, தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால் கால்வாயில் ஏதாவது பொருட்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Irrigation canal ,water opening stop ,
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்