ஓமலூர் பக்தர்கள் பாத யாத்திரை

ஓமலூர், பிப்.2:ஓமலூர் பொட்டியபுரம் சட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். நேற்று முன்தினம் பாதயாத்திரையை துவங்கினர். சட்டூர் கிராமத்தில் இருந்து ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி, ஈரோடு, தாராபுரம் வழியாக பழனிக்கு செல்கின்றனர். அப்போது, வழியில் உள்ள கோயில்களில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டியும் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவர். 5வது நாளில் பழனி மலையை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Related Stories: