×

கலெக்டர் அலுவலகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீர் கூட்டம் கிருமிநாசினி, முககவசம் மிஸ்சிங்

நாமக்கல், பிப்.2: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தமிழக அரசின் உத்தரவை அடுத்து 10 மாதங்களுக்கு பின் நேற்று மீண்டும் துவங்கியது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 10 மாதங்களுக்கு பிறகு நேற்று, கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 168 மனுக்கள் மக்கள் அளித்தனர். குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், அனைவரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் கைகழுவ தனி குடிநீர் இணைப்பு குழாய், தானியங்கி கிருமிநாசினி தெளிப்பு எந்திரம் அனைத்தும் தற்போது காட்சி பொருளாக மாறிவிட்டது.

நேற்றைய குறைதீர் கூட்டத்தில், சேலம் மண்டல குமரன் விசைத்தறி  பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா  மூர்த்தியிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: வெண்ணந்தூர், அலவாய்பட்டி,  ஓலைப்பட்டி, குருசாமிபாளைம் மற்றும் சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்,  ஏராளமானோர் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பருத்தி நூல்  விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு பல ஆயிரம் தொழிலாளர்கள்  வேலையிழந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்ட அளவில் கமிட்டி அமைத்து, நூல் விற்பனையை முறைப்படுத்த வேண்டும். இருமாதத்திற்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் விசைத்தறி தொழில் வளர்ச்சி கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : collector ,crowd ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...