தீ விபத்தில் முதியவர் பலி

நாமக்கல், பிப். 2: மோகனூர் அடுத்த தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராதாமணி(65). இவருக்கு ஆதரவு யாரும் இல்லை. பாப்பாயி என்பவருக்கு சொந்தமான ராசிபாளையம் லட்சுமி நகரில் உள்ள கீற்று கொட்டகையில், கடந்த ஒரு ஆண்டாக  தங்கியிருந்தார். இரவு நேரத்தில் தீ மூட்டி குளிர் காய்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, தீ மூட்டி குளிர் காய்ந்தவர், அப்படியே தூங்கி விட்டார். நள்ளிரவில் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. கொட்டகை முழுவதும் தீப்பற்றி கொண்டது. அருகில் இருந்தவர்கள், அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த தீ விபத்தில் உடல் கருகி ராதாமணி உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>