×

பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

கீழ்வேளூர்,பிப்.5: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு கண்டியன்காடு பகுதியில் அமைந்துள்ள வள்ளுவர் திடலில் 62ஆம் ஆண்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கள் நடத்தப்பட்டன. சாக்கு முழுவதும் மூடிக்கொண்டு தவழ்ந்து செல்வது, நெற்றியில் ரொட்டியை வைத்து வாயால் கவ்வும் போட்டி, கண்களை மூடிக்கொண்டு முட்டை உடைப்பது, கண்களை கட்டிக்கொண்டு அதிக பலூன்களை உடைக்கும் போட்டி, ஓவிய போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும், குளத்தில் அதிக அளவில் பலூன்களை போட்டு அவற்றை உடைக்கும் போட்டியும் நடைபெற்றது. இப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசு பொருட்களை வழங்கப்பட்டன.

 

Tags : Keelvelur ,Valluvar ,Vettaikaraniruppu Kandyankadu ,Keelvelur Union, Nagapattinam district ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்