×

புதிய சாலைகளை பொறியாளர் ஆய்வு

தர்மபுரி, பிப்.2: நல்லம்பள்ளி ஒன்றியம், தடங்கம் ஊராட்சி ஏமக்குட்டியூர் சாலை முதல் சவுளூர் வரை, 1.5 கி.மீ நீளத்திற்கு ₹58 லட்சத்தில் சாலை பணிகள் நடந்து வருகிறது. இதே போல், மாவட்டத்தில் பல இடங்களில் ₹75.59 கோடி மதிப்பில் சாலை பணிகள் நடக்கிறது. இப்பணிகளை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்ட கோட்டப்பொறியாளர் செந்தில்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘போக்குவரத்து நெரிசலை குறைக்க, வாரணாசி கேப் காமராஜர் சாலை முதல் சவுளூர் சாலை வரையும், பாப்பிரெட்டிப்பட்டி சாலை முதல் மாந்தோப்பு வாய்க்கால் சாலை வரையும், புறவடை முதல் பெரிய வீட்டுக்கொட்டாய் வரை மற்றும் சனிசந்தை முதல் கருங்காடு வரை என மாவட்டம் முழுவதும் 107 கி.மீ சாலைகள் ₹75.59 கோடி மதிப்பில் தரம் உயர்த்தல் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்,’ என்றார். இந்த ஆய்வின் போது, கோட்டப்பொறியாளர் ரஞ்சினிபிளாரன்ஸ், உதவி பொறியாளர் குருபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Engineer ,roads ,
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்