நாகர்கோவிலில் பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் அடையாளம் தெரிந்தது

நாகர்கோவில், பிப்.2 : நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ஹெப்சிபா (62). சம்பவத்தன்று காலையில், இவர் நாகர்கோவில் வெட்டூணிமடத்தில் உள்ள கார் ஷோரூம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது பின்னால் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், ஹெப்சிபா கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் செயினை பறித்தனர். இதில் செயின் 2 ஆக அறுந்து, ஒரு பகுதி கொள்ளையர்கள் கையில் சிக்கியது. இதில் அந்த செயினுடன் அவர்கள் மின்னல் வேகத்தில் பறந்தனர். இது குறித்து நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் இரு வாலிபர்களின் முகம் தெளிவாக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த பல சம்பவங்களிலும் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வாலிபர்களுடன், இந்த இரு வாலிபர்களையும் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. குமரி மாவட்டத்தில் சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

Related Stories:

>