நாகர்கோவிலில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு

நாகர்கோவில், பிப்.2: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் சார்பில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. ரயில்வே டி.எஸ்.பி. சுதீர்லால் பிரசாரத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார். இதில் ரயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப் - இன்ஸ்ெபக்டர் ஜோசப், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கேத்லின் மேரி மற்றும் ரயில்வே போலீசார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆதரவற்ற குழந்ைதகள் ரயில்களில் காணப்பட்டால் உடனடியாக 1098 சைல்டு லைனுக்கு போன் செய்ய வேண்டும். பயணத்தின் போது குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். ெதரியாத நபர்களின் அருகில் குழந்தைகளை அமர ைவக்க கூடாது. தேவையின்றி அதிகளவில் குழந்தைகளுக்கு தங்க நகைகளை அணிவிக்க கூடாது என டிஎஸ்பி சுதீர்லால் தெரிவித்தார்

Related Stories:

>