×

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சுரபி நதியில் கழிவுநீர் கலப்பு தங்கதமிழ்ச்செல்வன் ஆய்வு

சின்னமனூர், பிப். 2: சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில், சுருளிநதியும், முல்லைப்பெரியாறும் சங்கமிக்கும் சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வர பகவான் எழுந்தருளி உள்ளார். இந்நிலையில், குச்சனூரில் ஒட்டு மொத்தமாக வெளியேறும் கழிவுநீர், வடக்குப் பகுதியில் உள்ள காலனி பகுதியை கடந்து ராஜவாய்க்கால் சுரபி நதியில் கலப்பதால் புனித நீர் மாசுபடுகிறது. இதில் குளிக்கும் பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இது குறித்து குச்சனூர் பேரூராட்சி மற்றும் இந்து அறநிலையத்துறையில் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், இது குறித்து தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வனிடம் புகார் மனு அளித்தனர். இதன்பேரில், தங்கதமிழ்ச்செல்வன் நேற்று கழிவுநீர் கலக்கும் ராஜ வாய்க்காலான சுரபிரதி பகுதியை ஆய்வு செய்ததார். பின்னர் திமுக சார்பில் குச்சனூர் பேரூராட்சியில் புகார் மனு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

இதன்பேரில், சாக்கடை கழிவுநீர் செல்ல மாற்றுப் பாதை அமைத்து, ராஜாவாய்க்காலாகிய சுரபி நதியில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் உறுதியளித்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சின்னமனூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் முருகேசன், குச்சனூர் பேரூர் செயலாளர் ரபீக் ராஜா, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் அய்யப்பன், சுரேஷ், ராஜசேகரன், மாவட்ட பிரதிநிதி தாமோதரன், மார்க்கையன் கோட்டை முன்னாள் துணை சேர்மன் மகேந்திரன், அய்யம்பட்டி கிளைச் செயலாளர் ஆனந்தன் உள்பட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : river ,Surabi ,Kutch ,temple ,Saneeswara Bhagavan ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை