×

விலை உயர்வை கட்டுப்படுத்த வழியில்லை

காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி கூறுகையில், ‘‘மத்திய பட்ஜெட்டில் மும்பை-கன்னியாகுமரி இன்டஸ்ட்ரியல் காரிடர் திட்டம் காரைக்குடி வழியாக இணைப்பு. தமிழக ரயில் திட்டங்களுக்கு 5 ஆயிரம் கோடி தேவையை பூர்த்தி செய்வது. 55 சதவீதம் உள்ள விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்து நலிவடைந்து உள்ளவர்களுக்கு அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காத விலை, கட்டிட பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. உப்பு, சப்பு அற்ற பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிப்பது, சுகாதார மேம்பாடு, தொழில் நிறுவனங்களுக்கு கடன் வசதி, மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு உள்பட சலுகை அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சாலை வசதி, சென்னையில் 2வது மெட்ரோ ரயில், 2023க்குள் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்குவது, தனிச்சரக்குரயில் பாதை திட்டம் வரவேற்க கூடியது’’ என்றார்.

Tags :
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...