×

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

சிவகங்கை, பிப்.2:  கோழிகளுக்கு பிப்.14 வரை தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்: கால்நடை பராமரிப்புத் துறையால் 1.2.2021 முதல் 14.2.2021 வரை இருவாரங்களுக்கு கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 கால்நடை மருத்துவமனை, 79 கால்நடை மருந்தகங்களிலும் மற்றும் 45 கால்நடை கிளை நிலையங்களிலும், கோழி கழிச்சல் தடுப்பூசி பணி போடப்பட உள்ளது.

கோடை காலம் அடுத்து வருவதால் புறக்கடைக் கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டு இறப்புகள் தவிர்க்கப்படுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கோழிகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Vaccination camp ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கோழி கழிச்சல் தடுப்பூசி முகாம்