14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப்.2: பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு 15 சதவீத உயர்வுடன் கூடிய ஓய்வூதிய மாற்றத்தை 1.1.2017 முதல் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவப்படியை மாதம் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மருத்துவ படிகள் மற்றும் மருத்துவ பில்களுக்கான தொகையை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஆப்ஷன் 1ஐ அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் கோவில்பட்டி கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி தொலை தொடர்பு நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கம் கிளைத்தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். அதிகாரிகள் சங்கம் கிளைச் செயலாளர் கோலப்பன், ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவி செயலர் சுப்பையா, பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்க அகில இந்திய உதவித்தலைவர் மோகன்தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கிளை பொருளாளர் திருவட்டபோத்தி, கிளைச் செயலாளர் முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர்.

Related Stories:

>