×

4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்: என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..

சென்னை: இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்ய என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை திண்டிவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தர். இந்த நிகழ்ச்சியில் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் முதல்வர் உரையாற்றினார்.

முதல்வர் உரையில்:
ஒருகாலத்தில் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது தான் இன்றைய திண்டிவனம். திந்திரி என்றால் புளி என்று அர்த்தம். புளியமரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் அது காரண பெயராக வந்தது. சோழர்கள் காலத்திலும், பல்லவர்கள் காலத்திலும், நாயக்க மன்னர்கள் காலத்திலும் வர்த்தக நகராக இருந்த இந்த திண்டிவனம், செஞ்சிக்கோட்டை, மயிலம் முருகன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயின் என பல சிறப்புகளை கொண்டது விழுப்புரம் மாவட்டம். தலைநகர் சென்னைக்கு செல்ல வாயிலாக உள்ள திண்டிவனத்தில் இந்த மாபெரும் விழாவில் கலந்துகொள்வதில் பெறுமைகொள்கிறேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தொலைநோக்கு பார்வையோடு தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படதாக பல்வற்றை முத்திரை திட்டங்களாக செய்துகொடுத்தும் தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் சட்டங்களையும், பெரிய திட்டங்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் இருக்க கூடிய 234 தொகுதிகளுக்கும் வந்து உங்களுடைய குறைகளை கேட்டு கோரிக்கைகளை மனுக்களாக வாங்கியுள்ளேன். இந்த பயணத்தில் கோரிக்கை மனுக்களை மட்டும் பெறவில்லை, தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று திராவிட மாடல் அரசை அமைத்தோம்.

அந்த மனுக்களை எல்லம் 100 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதுதுறையை உருவாகினேன். இந்த துறை மூலமாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட 4,57,647 மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம். அந்த 100-வது நாள்(2021 ஆகஸ்ட் 14) தலைமைச் செயலகத்தில் சிறப்பு விழா நடத்தி 32,283 பேருக்கு பட்டாவும், 30,452 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும் வழங்கினேன். 19,664 வளர்ச்சி திட்ட பணிகளுக்கான ஒப்புதல் ஆணையும், 9,444 வீடுகள் கட்டுவதற்கான நிதி உதவியையும், ரூ.554.27 கோடி செலவி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆணைகளையும் வழங்கினேன். மக்களுடைய குறைகளை, தேவைகளைஉன்னிப்பாக கவனித்து விரைவாக நமது திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது என கூறினார்.

Tags : Dindivanam ,K. Stalin ,Chennai ,Chief Minister ,Dindivanat ,K. ,Stalin ,Wither ,
× RELATED ஆன்லைன் விளையாட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு: 3 சிறுமிகள் தற்கொலை