பரமக்குடியில் பிப்.4ல் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

பரமக்குடி, பிப்.2:  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, வரும் 4ம் தேதி பகல் 1 மணிக்கு பரமக்குடி வருகிறார். இதையொட்டி, பரமக்குடி அருகே உள்ள தெளிச்சத்தநல்லூர் நான்கு வழி சாலையில் பிரமாண்டமான கலைஞர் திடல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் புகார் பெட்டி மூலம் பெறுகிறார்.

இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பந்தல் அமைக்கும் பணி, கொடி தோரணங்கள் அமைக்கும் பணி, மேடைகள் அமைக்கும் பணி, தலைவர்களின் பெயர்களை கொண்ட நுழைவாயில்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ‘கலைஞர் திடல்’  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையொட்டி, கலைஞர் திடலில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திமுக கொடியை ஏற்றி வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், முன்னாள் மாவட்ட பதிவாளர் பாலு, பொதுக்குழு அருளானந்து, போகலூர் ஒன்றிய துணை தலைவர் பூமிநாதன், பரமக்குடி தெற்கு நகர செயலாளர் சேது கருணாநிதி, வடக்கு நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம், பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் கே.கே.கதிரவன்.  மேற்கு சந்திரசேகர், கமுதி வாசுதேவன், போகலூர்  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்திய குணசேகரன், போகலூர்  ஒன்றிய பொருளாளர் குணசேகரன், பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத்குமார், ஒன்றிய கவுன்சிலர் சேதுபதி, பரமக்குடி ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், மாநில ஒப்பந்ததாரர் ஜெயமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வழக்கறிஞர் கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்  சஞ்சய் காந்தி,வழக்கறிஞர்  பரமசிவம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>