பெட்டி கடைக்காரர் கொலையில் தலைமறைவாக இருந்தவர் கைது

நெல்லை, பிப். 2: சீதபற்பநல்லூரில் பெட்டி கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். சீதபற்பநல்லூர் அருகே உள்ள சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த தங்கம் என்ற தங்கபாண்டி (53), பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 2019 செப்.20ம் தேதி வெட்டுவான்குளம் ஊருக்கு மேல்புறமுள்ள குளத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தங்கபாண்டிக்கும், வெட்டுவான்குளம் பரமசிவன் (32) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதும், இந்த முன்விரோதத்தில் கொலை நடந்ததும் தெரிய வந்தது. இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பரமசிவனை எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் பரமசிவனின் செல்போன் உரையாடல் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராமர், எஸ்ஐ ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், சுத்தமல்லியில் தலைமறைவாக இருந்த பரமசிவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட போலீசாரை எஸ்பி மணிவண்ணன் பாராட்டினார்.

Related Stories:

>