×

மத்திய பட்ஜெட் வணிகர்களுக்கு ஏமாற்றம் வணிகர் சங்க பேரமைப்பு கருத்து

திருச்சி, பிப்.2: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை என அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் மீதான இறக்குமதி வரியை 10சதவீதமாக குறைத்திருப்பது வரவேற்கதக்கது. இதனால் தங்கம் விலை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு-கேரள சாலை இணைப்பு திட்டம் வரவேற்க தக்கது. நல்ல நிலையில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி, பாரத் பெட்ரோலியம் போன்றவற்றின் பங்குகளை தனியாருக்கும் விற்கும் திட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும். வேளாண்(செஸ்) வரி என்ற பெயரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50ம், டீசல் விலை ரூ.4ம் வரி விதித்திருப்பது விலை வாசி உயர்வுக்கு வழி வகுக்கும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த வணிகர்களுக்கு நிதியுதவி, கடனுதவி, வரிச்சலுகை போன்ற எவ்வித அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி