×

வருமான வரித்துறை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டைப்பிஸ்ட் கைது

சென்னை: ரூ.1.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை டைப்பிஸ்ட் கைதானார். சென்னையைச் சேர்ந்த ஒருவர், 2020-2021ம் ஆண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் ரூ.19 லட்சம் கட்ட வேண்டியிருந்தது. இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற, வருமான வரித்துறையில் டைப்பிஸ்ட்டாக பணியாற்றும் ஒருவர் ரூ.1.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாதவர், இது குறித்து சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வைத்து லஞ்சப் பணம் ரூ.1.5 லட்சத்தை கொடுத்தபோது, சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Chennai ,Income Tax Department ,
× RELATED அதிகரிக்கும் வெப்பத்தால் பகலில்...