×

மகா மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

வலங்கைமான், பிப்.2: வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று முதலாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் சக்தி ஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது .இக்கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பாடை காவடி திருவிழா தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும்.இந்நிலையில் மகா மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற முதலாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. அதனை அடுத்து சக்தி ஹோம வழிபாடுநடை பெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர்  மகாமாரியம்மன் மற்றும் பேச்சி அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. மாலை அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வலங்கைமான் ஒன்றிய குழு தலைவர் சங்கர் நீடாமங்கலம் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் இளவரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, அலுவலக மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : Maha Mariamman Temple ,
× RELATED திருநள்ளாறு அடுத்த சேத்தூர் மகா...