×

திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா

திருவையாறு,பிப்.2: தஞ்சை மாவட்டம் திருவையாற தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது. வழக்கமாக இந்த ஆராதனை விழா 5 நாட்கள் நடைபெறும்.  இந்த ஆண்டு கொரோ னா தொற்று காரணமாக 2 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் அரித்துவாரமங்கலம் பழனிவேல் வரவேற்றார். விழாவை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். விழாவில் சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமைதாங்கி பேசும்போது, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த விழா 2 நாட்கள் நடைபெறுகிறது. கர்நாடக இசைக்கு என்று தனி இடம் உண்டு. அதன்படி தியாகராஜர் வாழ்ந்த திருவையாறில் அவருடன் சமாதி அமைந்துள்ள இடத்தில் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது.   இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். சுதா ரகுநாதன் குழுவினர் பாட்டு, அருண்  குழுவினர் பாட்டு, பாலசந்திரன் புல்லாங்குழல் இசை, பாபநாசம் அசோக் ரமணி  குழுவினர் பாட்டு, சங்கர் குழுவினரின் டபுள் வையலின் உள்பட இசை நிகழ்சி  நடந்தது. விழாவில் அறங்காவலர்கள் சுரேஷ்மூப்பனார், சந்திரசேகர மூப்பனார், பஞ்சநதம், டெக்கான்மூர்த்தி, கணேசன், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள், இசை கலைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiyagaraja Worship Ceremony ,Thiruvaiyar ,
× RELATED திருவையாறு கோயிலில் சித்திரை...