×

தஞ்சை மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

தஞ்சை,பிப்.2: தஞ்சை மாவட்டத்தில் கருதி தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் பிறப்பித்துள்ளார். தாசில்தார்களின் தற்போதைய பதவி, மாற்றம் செய்யப்பட்ட இட விவரங்கள்:டாஸ்மாக் உதவி மேலாளர் ராமலிங்கம், தேர்தல் தனி தாசில்தாராகவும், தேர்தல் தனி தாசில்தால் சந்தனவேல், திருவிடைமருதூர் தாசில்தாராகவும்,திருவிடைமருதூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், தஞ்சை தாசில்தாரகவும் மாற்றப்பட்டுள்ளனர். தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன், வரவேற்பு தனி தாசில்தாராகவும், பூதலூர் தாசில்தார் அருணகிரி, ஒரத்தநாடு தாசில்தாராகவும், பட்டுக்கோட்டை ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் ராமச்சந்திரன், பூதலூர் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு தாசில்தார் கணேஷ்வரன், பட்டுக்கோட்டை தனி சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பட்டுக்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தார் சாந்தகுமார், பட்டுக்கோட்டை நகர நில வரித் திட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். நகர நில வரித் திட்டம் செந்தில்குமார், பட்டுக்கோட்டை தனி ஆதிதிராவிடர் நலம்தனி தாசில்தாராகவும், கஜா புயல் மறுசீரமைப்புத் திட்ட தாசில்தார் மல்லிகா தேவி, பட்டுக்கோட்டை முத்திரக்கட்டணம் தனி தாசில்தாராகவும். தாசில்தார் திருமால், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி, தனி பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும், தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை பிரிவு) கண்ணன், கும்பகோணம் முத்திரைக் கட்டணம் தனி தாசில்தாராகவும், திருவையாறு ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் பூங்கொடி, கும்பகோணம் ஆதிதிராவிடர் நலம் தாசில்தாராகவும், கும்பகோணம் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் மதுசூதனன், திருவையாறு ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். சமூகப் பாதுகாப்பு திட்டம் ரகுராமன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலராகவும், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் இளமாருதி, தஞ்சை சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tashildars ,Tanjore District ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...