×

தொடர் மழை 1 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர் பாதிப்பு அரசுக்கு அறிக்கை தாக்கல்

தஞ்சை, பிப்.2:  தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 1,37,147 ஹெக்டேரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே, டிசம்பர் மாதத்தில் புரெவி புயல், தொடர் மழையால் 8,550 ஹெக்டேரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டது. இதற்கான நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த தொடர் மழையால் ஏராளமான நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக கணக்கெடுப்பு பணி 15 நாட்களாக நடந்தது. இப்பணி கடந்த 30ம்தேதி முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இதில், சம்பா, தாளடி பயிர்கள் 1 லட்சம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தஞ்சை, பிப்.2: தஞ்சை மாவட்டத்தில் தாளடி பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையை மீண்டும் திறந்து வரும் 20ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட அவைத் தலைவர் ரவிச்சந்தர் உள்ளிட்ட விவசாயிகள் இளம் தாளடி நெற்பயிர்களுடன் வந்து அளித்த மனுவில், ஜனவரி 28ம் தேதி மேட்டூர் அணை மூடுவது நடைமுறை என்றாலும் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் எந்த முன்னறிவிப்பும் இன்றி மேட்டூர் அணையை மூடியுள்ளனர். குறுவை சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகள் தாளடி நெல் சாகுபடி தாமதமாக செய்துள்ளனர். குறிப்பாக வெண்ணாறு கோட்டம் பிள்ளைவாய்க்காலில் 1300 ஏக்கரில் தற்போதுதான் கலப்பு கதிர் வந்துள்ளது. தற்போது மழையும் நின்றுவிட்டதால் கதிர் வரும் நிலையில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து பதராகும் அபாயம் உள்ளது.

எப்போதும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு மேட்டூர் அணையை மூடுவதை பிப்.20 வரை நீட்டித்து பாசன வசதியை பெற்றுள்ளோம். தற்போது விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் மேட்டூர் அணை பாசனம் நிறுத்தப்பட்டுள்ள மிகவும் வேதனையானது. எனவே வரும் பிப்.20ம் தேதி வரை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறோம் என மனுவில் ரவிச்சந்தர் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு