கந்தர்வக்கோட்டை அருகே பைக்கில் சென்ற ஓவியர் மர்மச்சாவு

கறம்பக்குடி, பிப். 2: கந்தர்வக்கோட்டை அருகே பைக்கில் சென்ற ஓவியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சேவியர் குடிக்காடு ஆதிதிராவிடர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், இவர் ஆர்டிஸ்டாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்று வருகிறேன் என்று மனைவியிடம் கூறி விட்டு சங்கர் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடினர். இதற்கிடையில் சேவியர் குடிக்காடு நாயக்கர்பட்டி கிராமம் அருகே உள்ள சாலையில் உள்ள தைலமரக்காட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்துடன் இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த இடத்துக்கு சென்று விஜயலட்சுமி பார்த்தார். அப்போது தனது கணவர் சங்கர் தான் இறந்து கிடப்பதாக கூறினார். இதையடுத்து கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்துக்கு மக்கள் தெரிவித்தனர். கந்தர்வக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் எஸ்ஐ சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்தர்வக்கோட்டை போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார்ன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சங்கர் கொலை செய்யபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: