×

விராலிமலை அருகே பைக் மீது பேருந்து மோதி வாலிபர் பலி

விராலிமலை, பிப். 2: விராலிமலை அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் சிவசங்கர் (25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விராலிமலையில் தந்தை நடத்தி வரும் அரிசி கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது பைக்கில் விராலிமலை- இலுப்பூர் சாலையில் வந்தார். அப்போது மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து, பைக் மீது மோதியது. இதில் படுகாயடைந்த சிவசங்கரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கர் இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Viralimalai ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...