×

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தாசில்தார் அதிரடி மாற்றம்

பெரம்பலூர்,பிப்.2: சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக பெரம்பலூர் மாவட்டத்தில் 16 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையின்கீழ் ஒரே இடத்தில் ஓராண்டுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 16 தாசில்தார்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். இதன்படி பெரம்பலூரில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த அருளானந்தம், ஆலத்தூர் தாசில்தாராகவும், ஆலத்தூரில் தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த பாலசுப்ரமணியன் வேப்பந்தட்டை தாசில்தாராகவும், வேப்பந்தட்டை தாசில்தாராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜ் குன்னம் தாசில்தாராகவும், குன்னம் தாசில்தாராகப்பணி புரிந்து வந்த சின்னதுரை பெரம்பலூர் தாசில்தாராக வும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் சப்-கலெக்ட ரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த பாரதிவளவன், டாஸ்மாக் உதவி மேலாளராகவும், கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) பணி புரிந்து வந்த சிவா, கலெக்டர் அலுவலக (பொது) மேலாளராகவும், கலெக்டர் அலுவலக (பொது) மேலாளராக பணி புரிந்து வந்த ஷாஜஹான், கோட்ட கலால் அலுவலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த தமிழரசன், கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வந்த சத்திய மூர்த்தி, பெரம்பலூர் சப். கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த துரைராஜ், குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், குன்னம் சமூக பாதுகாப்புதிட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த வனிதா, கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தாராகவும் பணிமாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.பெரம்பலூர் கலால் மேற்பார்வை அலுவலராகப் பணிபுரிந்து வந்த அனிதா, பெரம்பலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், பெரம்பலூர் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகப் பணிபுரிந்து வந்த நூர்ஜ ஹான், தமிழ்நாடு அரசுக் கேபிள் டிவி நிறுவனத்தின் துணை மேலாளராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி துணை மேலாளராக பணிபுரிந்து வந்த முத்துக்குமரன், பெரம்பலூர் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெரம்பலூர் நிலம் கையகப்படுத்தும் பிரிவு தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த சீனிவாசன், பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், பெரம்பலூர் கோட்ட கலால் அலுவலராக பணிபுரிந்து வந்த பொன்னுதுரை, பெரம்பலூர் கலால் மேற்பார்வை அலுவலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Dashildar Action Transfer ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி