சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,பிப்.2: அரியலூர் ரயில் நிலையத்தில் உள்ளே பொறியாளர் அலுவலகம் முன் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையில் பணிமனைகள், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் 30 வருட சர்வீஸ் முடித்தவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கனுப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 252 ரயில்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, ரயில்வே நிலையங்களை தனியாருக்கு விற்பது என்ற முடிவை கைவிட வேண்டும். 55 வயது மற்றும் 30 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories:

>