புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி காரைக்காலில் கையெழுத்து இயக்கம்

காரைக்கால், பிப். 2: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெறக்கோரி காரைக்காலில் கையெழுத்து இயக்கம் நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் உட்பட அமைச்சர்கள் தரும் எந்த கோப்பிலும் கையெழுத்திடுவது இல்லை, மக்கள் நல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். புதுச்சேரியின் வளர்ச்சி இவரால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது இருந்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி துணைநிலை ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு புதுச்சேரி முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

காரைக்கால் திருநள்ளாறு அமைந்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கையெழுத்து பெற்றனர். மேலும் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலக்குழு உறுப்பினர் வின்சென்ட் கூறும்போது, துணைநிலை ஆளுநரை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார்.

Related Stories:

More
>