தாந்தோணிமலை- ராயனூர் இடையே சாக்கடை வடிகால் அமைக்கும் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

கரூர், பிப்.2: தாந்தோணிமலை ராயனூர் இடையே நடைபெற்று வரும் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் தாந்தோணிமலை இடையே கடந்த சில மாதங்களாக சாக்கடை வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி காரணமாக குடியிருப்பு பகுதிகளின் அருகே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் காரணமாக பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>