×

தங்கம் திருட்டு வழக்கு சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரிக்கு ஜாமீன்

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் சபரிமலை மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆன பிறகும் இதுவரை இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிய சபரிமலை கோயில் முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமாருக்கு கொல்லம் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Special Investigation Team ,Thantri Kandara Rajeeva ,Travancore Devaswom Board ,
× RELATED சீன ஆக்கிரமிப்பு குறித்த உரையை...