×

அடிப்படை வசதிகள் இல்லாத திருத்தணி பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

திருத்தணி: திருத்தணி பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும் பேருந்துகள் செல்கின்றன. இதனால் இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில், திருத்தணி பேருந்து நிலையத்தில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் வசதி உள்பட எதுவும் சரியாக இல்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் அவதியுறுகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பெரும்பாலான இருக்கைகள் உடைந்துவிட்டதால் பஸ்சுக்காக மணிக்கணக்கில் பயணிகள் கால்கடுக்க நிற்கின்றனர்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பெற்றோர் வேதனையில் தவிக்கின்றனர். திருத்தணி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே திருத்தணி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தரவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “திருத்தணி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி சரியாக கிடையாது. குடிநீருக்குகூட அலையவேண்டிய நிலைமைதான் உள்ளது. இவற்றை சரிப்படுத்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றன

Tags : Trivandrum ,facilities ,Passengers ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...