×

புராதன சின்னமான கிருஷ்ணா மண்டபத்தில் விரிசல்: சீரமைக்கும் பணியில் தொல்லியல் துறை தீவிரம்

மாம்மல்லபுரம்: உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் சுற்றுலா தலம், கோயில் நகரமாகவும்  பார்க்கப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, கிருஷ்ணா மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை  கோயில் உள்பட பல்வேறு சின்னங்களை யுனேஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அனைத்து சிற்பங்களையும் கண்டு ரசித்து, அவற்றின் முன் நின்று போட்டோ மற்றும் செல்பி  எடுத்து மகிழ்வர். இங்கு பாறையை குடைந்து கிருஷ்ணா மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை குடைவரை மண்டபம் எனவும் அழைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், இந்த கிருஷ்ணா மண்டபத்தின் மேல் பகுதியில் ஆங்காங்கே  விரிசல்கள் ஏற்பட்டது. இதனால், மழைக்காலங்களில் மண்டபத்தின் மேல் பகுதியில் இருந்து மழைநீர் மண்டபத்திற்குள் கொட்டியது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் மண்டபத்துக்கு செல்ல அச்சமடைந்தனர். எனவே இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும்  பொதுமக்கள் தொடர்ந்து தொல்லியல் துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில், தொல்லியல் துறை அதிகாரிகள், கிருஷ்ணா மண்டபத்தை ஆய்வு செய்து, அங்கு விரிசல் ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Krishna Mandapam: Archaeological department ,
× RELATED புராதன சின்னமான கிருஷ்ணா மண்டபத்தில்...