பைக் மோதி பந்தல் தொழிலாளி பலி

திருச்சி, ஜன.30: திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் மூக்கன்(63). பந்தல் போடும் தொழிலாளி. இவர் நேற்று நடந்தபடி சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக சென்ற வாலிபர் ஒருவர் மூக்கன் மீது மோதினார். இதில் மூக்கன் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூக்கன் இறந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>