சேவை வரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்

தஞ்சை, ஜன.30: அகில இந்திய அளவில் சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பு, வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பு தலைவர் பாலசுந்தரம், செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சுந்தரநாராயணன், இணை செயலாளர் குகனேஸ்வரன், வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கணேசன், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மத்திய ஜிஎஸ்டி உதவி ஆணையரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பு தலைவர் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறும்போது, ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியான மாற்றங்களாலும், எண்ணிலடங்காத அறிவிக்கைகளினாலும் மிக அதிக அபராத வட்டியினாலும், ஜிஎஸ்டி இணையதள பிரச்னைகளாலும், ஜிஎஸ்டி கட்டும் வணிகர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்வது, அபாரத வட்டி, தாமத கட்டணம் ஆகியவற்றை முழுமையாக கைவிட வேண்டும். இந்த குறைபாடுகளை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>