×

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் பேரணி

தஞ்சை, ஜன.30: கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி நேற்று பா.ம.க.வினர் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தஞ்சை மேலவஸ்தாசாவடியிலிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்ட ஊர்வலத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ம.க.ஸ்டாலின், மாநகர செயலாளர் சரவணன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், வடக்கு மாவட்ட தலைவர் திருஞானம்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 1951ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை 38 ஆண்டுகளுக்கு ஒரே தொகுப்பாக இருந்தது. 1989ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தின் போராட்டத்தை தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டு பிரிவு உருவாக்கப்பட்டது. அதன்பின் 32 ஆண்டுகளாக அதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 2 தொகுப்புகளாக மட்டும் பிரித்து வழங்குவது எந்த வகையிலும் நியாமல்ல. அது சமூக நீதிக்கு வலுசேர்க்காது. எனவே வன்னியர் சங்கத்தின் 40 ஆண்டு கால கோரிக்கைகயை நிறைவேற்றும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான ஆணையை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

Tags : rally ,People's Party ,Vanni ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை...