×

சிறுவன் உள்பட 30 பேர் காயம் கறம்பக்குடியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

கறம்பக்குடி, ஜன. 30: கறம்பக்குடி வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கறம்பக்குடி பழைய தாலுகா அலுவலகம் முன் தாசில்தார் ஷேக் அப்துல்லா தலைமையில் வருவாய்த்துறையினர் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் பழைய தாலுகா அலுவலகத்தில் இருந்து பேரணியாக பேருந்து நிலையம், புதுக்கோட்டை சாலை, சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், உள்கடை வீதி, மீன் மார்க்கெட் பகுதி, அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் வழியாக பழைய தாலுகா அலுவலகத்தை அடைந்தனர். பேரணியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும். அனைவரும் வாக்களித்து ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி சென்றனர். பேரணியில் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கறம்பக்குடி காவல் நிலையத்தில் போலீசார் சார்பில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆலங்குடி டிஎஸ்பி முத்துராஜா முன்னிலையில் போலீசார் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Voter Day Awareness Rally ,
× RELATED தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி