×

கனிமொழி எம்பி பேட்டி வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி, ஜன. 30: பொன்னமராவதி அருகே வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதைதொடர்ந்து விழா நாட்களில் தினம்தோறும் சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளியவுடன் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை தேர் அடைந்தது. பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர். இதேபோல் தேனிமலை முருகன், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது.


Tags : Kanimozhi MP ,Interview ,Vaiyapuri Subramania Swamy Temple Therottam ,
× RELATED ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை பேட்டி