சிக்கன் சாப்பிட்டவர்களுக்கு உடல்நல கோளாறு விற்பனை செய்த கடைக்கு சீல்

அறந்தாங்கி, ஜன. 30: அறந்தாங்கி பெரியகடை வீதியில் பொறித்த சிக்கன் விற்பனை கடை உள்ளது. இங்கு சிக்கன் வகைகளை நெறுப்பில் அரை வேக்காட்டில் வேக வைத்தும் பிரட், சிக்கன் வகைகளையும் விற்பனை செய்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கடையில் சிக்கன் உணவுகளை வாங்கி சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அறந்தாங்கி, மணமேல்குடி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்டு நேற்று அதிகாலையில் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories:

>