விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் காணொளி மூலம் நடந்த குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

பெரம்பலூர்,ஜன.30: பெரம்பலூரில் நடந்த விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில், வட கிழக்குப் பருவ மழையால் சாகுபடிபாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசும்போது, கடந்த 2மாதங்களாக தொடர்ச்சியாக நிவர், புரெவி புயல்களால், வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பெய்த கன மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல், வெங்காயப் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறித்து உரிய அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் பெற்று தர வேண்டும். அரசலூர் ஏரிக்கரை உடை ந்து வெள்ள நீர் வயல்களில் புகுந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளே காரணம். உரிய நேரத்தில் ஏரிக்கரையை செப்பனிடாத அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி நீர் புகுந்து சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை தொடர்ந்து காணொளி காட்சியின் மூலமாக நடத்தாமல், வழக்கம்போல் நேரில் பங்கேற்று குறைகளை தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளி ட்டகோரிக்கைகளை நிறை வேள்ளிட வலியுறுத்தினர்.

கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெ ங்கடபிரியா தலைமை வகித்து பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு 88,318 ஹெக்டேர் பரப் பளவில் பயிர்சாகுபடி செய் யப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. ஏரிக்கரை உடை ந்து அரசலூரில் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்புசெய்து வருவாய் பேரிடர் மேலாளர் மூலம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடத்தாமல் காலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேரடியாக நடத்தப்படும் என்றார்.

Related Stories:

>