×

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் பேரணி

பெரம்பலூர்,ஜன.30: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர்களிடம் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூரில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் ரோவர் வளைவு பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாமக கட்சியினர், வன்னியர் சங்கத்தினர் ஊர்வலமாக திரண்டு வந்தனர். அப்போது ஆண்கள் ஏர் கலப்பைகளையும் பெண்கள் கைகளில் கலைக்கட்டுகளையும், தலையில் இருப்புத்தட்டில் மண், கற்களையும் சுமந்து வந்தனர். பாமக, வன்னியர் சங்கக் கொடிகளை ஏந்தி இட ஒதுக்கீடு கோரும் கோஷங்களை எழுப்பியபடி வந்தனர். இவர்களை பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், பெரம்பலூர் டிஎஸ்பி (சட்டம் ஒழுங்கு) சரவணன், இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், செந்தில்குமார், ஜெயச்சித்ரா, (டிராபிக்) கோபிநாத் உள்ளிட்டப் போலீசார் பாலக்கரையில் பேரிகாடு அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நிர்வாகிகள் மட்டுமே செல்லவேண்டும் என தெரிவித்தனர். அதன்படி வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலெக்டர் வெங்கட பிரியாவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags : rally ,People's Party ,Vanni ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை...