×

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜன.30: பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்றால் உயிர் நீத்த செவிலியர்களுக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு அரசுவேலை வழங்க வேண்டும். கொரோனா பணிக்கு கொடுப்பதாக அரசு உறுதியளித்த ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும். செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு செவிலியர்களை போல் 5 கட்ட காலமுறை பதவி உயர்வு, தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட பதவி பெயர் மாற்ற அரசாணை வழங்கிட வேண்டும். இந்திய செவிலிய குழும விதிகளின் படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய செவிலியர்களை பணியமர்த்த வேண் டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், பழைய மருத்துவக் கல்லூரிகளில் போதுமான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்கிற 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ் நாடு செவிலியர் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சாந்தி, துணைத் தலைவர் ராஜ கோபால், செயலாளர் மோ னிகா, பொருளாளர் முருகேசன், ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Tamil Nadu Nurses Association ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்