×

அரசலூர் ஏரி உடைப்பு எதிரொலி விசுவக்குடி அணை பகுதியில் விரிசல் சீரமைக்கும் பணி தீவிரம்

பெரம்பலூர்,ஜன.30: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூர் பெரிய ஏரியின் கரை பழுதாகித் தண்ணீர் கசிந்து வந்த நி லையில் அதனை பொதுப்பணித்துறை சரிசெய்யாததால், கடந்த 27ம்தேதி உடை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் 127ஏக்கர் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீரில் மூழ்கி சேதமானது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமான விசுவக்குடி அணையில் ஏற்கனவே ஏற்பட்டு சரிசெய்யப்படாத விரிசல்கள், பழுதுகளை சீரமைக்கும் பணிகள் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளன. அரசலூர் ஏரியில் நிரம்பியிருந்த 10 மில்லிய ன் கனஅடி தண்ணீரே 127 ஏக்கரை நாசப்படுத்திய நிலையில், 27மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ள விசுவக்குடி அணையின் பாதுகாப்பை சரிசெய்யவே ண்டியது அவசியம் என்பதை உணர்ந்த பொதுப்ப ணித்துறை, கடந்த 4 ஆண்டுகளாக விசுவக்குடி அணைக்கட்டு பகுதியில் விரிசல்களைக் கண்டும் காணாமல் இருந்தநிலையில், கடந்த 2 நாட்களாக அதிதீவிரமாக பழுதுகளை சீரமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் (அரியலூர்) ஆசைத் தம்பி உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் மேற்பார்வையில் நடந்துவருகிறது. இதேபோல் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 73ஏரிகளில் நடப்பாண் டு 100 சதவீத கொள்ளளவை எட்டிய 32ஏரிகனை பரிசோதித்து சீரமைக்க பொதுப்பணித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Echo ,area ,Visuvakudi Dam ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...