இடப்பிரச்னை தகராறு விவசாயி மீது தாக்குதல் 3 பேர் கைது

அரியலூர்,ஜன.30: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையயம் அருகே தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாமூர்த்தி (41). விவசாயி. அதே பகுதியில் வசிப்பவர் பிரபாகரன்(21). இருவரும் இடப்பிரச்சனை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரபாகரன் உறவினர்கள் இளங்கோவன்(21), தனவேல்(51) ஆகிய 3 பேரும் சேர்ந்து கருணாமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த கருணாமூர்த்தி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கருணாமூர்த்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 3பேரையும் கைது விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories:

>