×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு சதவீத காப்பீட்டு தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம், ஜன. 30: விவசாயிகளுக்கு 100 சதவீத காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க கோரி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மக்கள் அதிகார இயக்கம் சார்பில், அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். கொள்ளிடம் முதல் வடரங்கம் வரை உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை மேம்படுத்த வேண்டும்.கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 42 கிராம ஊராட்சிகளில் நீண்ட வருடங்களாக ஒப்பந்த வேலைகளில் பிடித்தம் செய்யப்பட்ட ஐடி, எஸ்.டி, ஜி எஸ் டி உள்ளிட்ட தொகையை அரசு கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததை கண்டித்தும், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பழுதடைந்துள்ள 6000 தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்ககோரியும், சமூக அக்கறை இல்லாமல் பதவிகளை அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்மக்கள் அதிகார அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வில்வநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நாகை மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் ஒன்றிய ஆணையர் இளங்கோவனிடம் வழங்கினர்.

Tags : Demonstration ,floods ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி